/ கட்டுரைகள் / நிலம் பார்த்துப் பெய்யும் மழை

₹ 150

சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நுாலகம் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. வாசிப்பு, சமூகத்தை எப்படி மாற்றும் என கூறுகிறது. நியாயம் ஆளாளுக்கு மாறுவதையும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும் நீதிமன்ற நடவடிக்கையுடன் பொருத்துகிறது. சமூக ஊடக உண்மை நிலை குறித்து உரைக்கிறது. தெருவோரம் வசிப்போரின் வாழ்வை உணர்ந்து, உதவ வேண்டும் என்கிறது. பொது இடங்களில் ஒழுக்கம் பேணுவதை வலியுறுத்துகிறது. கழிப்பறை கேட்டு காவல் நிலையத்தில் தந்தை மீது புகார் கொடுத்த சிறுமியின் செயல் ஆச்சர்யப்பட வைக்கிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றம், வீடு தேடி வருவதை வளர்ச்சியாக கூறும் நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ