/ பொது / நினைவு நாடாக்கள்

₹ 140

757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 304) வாலி, வாலிபக் கவிஞர் மட்டுமல்ல; காவியக் கலைஞரும் கூட. திரையுலகில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை அளித்தபடி, நான்கு தலைமுறைகளை கடந்து வந்து, இன்றும் வெற்றி வீரராக ஒளிர்பவர். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு வாலி எழுதிய, பல பாடல் வரிகள் இன்றைக்கும், தாரக மந்திரம் போன்று, பலராலும் உச்சரிக்கப்படுகின்றன.அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் போன்ற படைப்புகளால், சினிமாவைத் தாண்டிய சிறந்த இலக்கிய கர்த்தாவாகவும் ஒளிர்பவர் வாலி. அவர், தமது பால பருவம் துவங்கி, நாடகம் போட்டு, வானொலியில் பணிபுரிந்து, கவியரங்கில் உயர்ந்து, திரையுலகில் கால் பதித்து வளர்ந்து வந்த நாட்களை நினைவு கூர்ந்து ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரைத் தொடரின் நூல் வடிவம் இது.எதைச் சொல்லவும் வார்த்தைகளை வாலி தேர்ந்தெடுத்து தொடுக்கிற விதம், புத்தாயிரம் கவிஞர்களை பூத்தொளிரச் செய்துவிடும். சில சம்பவங்களை ஒளித்து மறைக்க தெரியாததால், சிலர் கண்டனங்களுக்கு ஆளான பகுதிகளும் உண்டு என்றாலும், இந்த நூல் வாசிக்கத் தவற விடக் கூடாத நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை