/ பயண கட்டுரை / நிறம் மாற்றும் மண்
நிறம் மாற்றும் மண்
அமெரிக்க பயண அனுபவ நுால். குடும்ப அமைப்பு, திருமணம், கல்வி முறை, குழந்தை சுதந்திரம், சேமிப்பு, உணவு பழக்கம், சட்டம் ஒழுங்கு, சிறைச்சாலை மாறுபட்டிருப்பதை விவரிக்கிறது. நவீன வாழ்க்கை முறையில் சிக்கல்களையும் பகிர்கிறது. சட்டங்களை, இந்தியாவுடன் ஒப்பிட்டு கூறுகிறது. அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களையும் விவரிக்கிறது. அமெரிக்க நடைமுறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வற்றை சொல்கிறது. அரசியலில் தலைவர்களின் பதவி, அதிகார வெறியை விரிவாக தருகிறது. காலமும், மாற்றமும் யாருக்காகவும் நிற்பதில்லை என உணர வைக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்