/ கதைகள் / ஒலிக்குகை

₹ 150

கற்பனை திறனுடன் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். குரங்கு கதையில் டார்வின் தத்துவம் பிரதிபலிப்பதுடன், மனித உருவம் எடுத்த குரங்கு, அந்த உருவத்தில் வாழ பிடிக்காமல் மீண்டும் குரங்காக மாறியதை கூறுகிறது. ஒரே பெயரில், இரண்டு பேர் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தனர். சிபாரிசு வாங்கியவர் விபத்தில் சிக்க, எதார்த்தமாக சென்றவருக்கு வேலை கிடைக்கிறது. விபத்தில் சிக்கியவர் நடந்த விபரங்களை கூற சுவாரசியமாக நகர்கிறது. விபத்தில் சிக்கிவருக்கு வேலை கிடைத்ததா என விடை காண்கிறது. மயானத்தை ஒட்டிய பூந்தோட்டத்தில் திகில் அனுபவமாக நகர்கிறது, ‘பூக்கள் சொரியும் கனவு’ கதை. பெற்றோரை இழந்த சிறுமியுடன் புலிக்கு உள்ள பாசத்தை, ‘வன விலங்கு’ கதை சுவாரசியமாக கூறுகிறது.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ