/ வாழ்க்கை வரலாறு / ஒளியர்- காஞ்சிப் பல்லவர்கள்
ஒளியர்- காஞ்சிப் பல்லவர்கள்
தமிழகத்தின் வட பகுதியை ஆட்சி செய்த பல்லவர்களை, ‘ஒளியர்’ என அழைத்தனர். அவர்கள் என்ன செய்து விட்டனர் என்ற கேள்விக்கு விடை சொல்லும் நுால். ஒளியர் வாழ்ந்த நிலப்பகுதிகள், அவர்களின் குடியேற்றம் குறித்தும்; பல்லவர்கள் யார், மூன்றாம் சிம்மவர்மன் ஆட்சி குறித்தும் எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறார் ஆசிரியர். நுாலில், ‘காழ் என்ற சொல், ஞாயிறு, சூரியன், புகழ், உறுதி, வைரம், குற்றம் என பல பொருள் தரும்...’ என விவரிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை, கரம்பைக்குடி ஊராட்சியில் உள்ள அம்புக்கோவில் என்ற ஊர், தொன்மையில், ‘அழும்பில் நாடு’ என அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.– டி.எஸ்.ராயன்