/ வாழ்க்கை வரலாறு / ஓமந்தூரார் முதல் முதல்வர்

₹ 120

ஆட்சி அதிகாரத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்தியது குறித்து தெரிவிக்கும் நுால். முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை தொகுத்து தருகிறது. சேவையில் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.எளிமையுடன் நேர்மையாக வாழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓமந்துார் பி.ராமசாமி. மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு தொண்டு செய்தவர். காந்திஜியின் அடியொற்றி சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றவர். கிராமங்களுக்கு நடந்து சென்று விடுதலை உணர்வை விதைத்தவர். அவரது வாழ்வின் சாதனைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.இளமை பருவம் துவங்கி, வரலாற்றில் இடம் பிடித்த தலைவர்கள் என்பது வரை, 20 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தியாக வாழ்வை எடுத்துக்காட்டும் நுால்.– மதி