/ வாழ்க்கை வரலாறு / ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

₹ 85

மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்துாரார் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக, எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இரண்டாண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், இன்றளவும் ஓமந்துாராரின் நிர்வாகத்திறமை போற்றப்படுகிறது. அதனை பல சான்றுகளோடு விளக்குகிறார். நிர்வாக பயிற்சி ஏதும் இல்லாது, ஆட்சியில் அமர்ந்து அரிய சாதனை படைத்த ஓமந்துாராரை, நேரு பாராட்டிய விதம் போன்றவை அரிய தகவல்கள். ஒரு உன்னதமான, அப்பழுக்கற்ற அரசியல்வாதியின் வாழ்க்கையை படிக்கும் போது, இன்றைய அரசியல்வாதிகள் மனதில் வந்து போகின்றனர். இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய புத்தகம்.ஜிவிஆர்


சமீபத்திய செய்தி