/ வரலாறு / ஒரு மேடை பல வேடங்கள்

₹ 250

தமிழ் நாடகக்கலை வரலாற்றை உள்ளது உள்ளபடி தெரிவிக்கும் நுால். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் நாடகம் என்ற சொல் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்கூறுகிறது. கூத்து என்ற சொல் நாடகத்தை குறிப்பிட்டதை அறியத் தருகிறது. தமிழகத்தில் நாடகத்தால் புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்வை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. வேடத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியதை விளக்கியுள்ளது. நாடக வசூல் குறித்த விபரங்களையும் கூறுகிறது. முதன்மை நடிகர்கள் திடீரென்று விலகுவதையும், புதியவர்களை நடிக்க வைக்கும் போது ஏற்படும் சிரமங்களையும் தெரிவிக்கிறது. கதாபாத்திரங்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. தமிழ் நாடக வரலாற்றை தெளிவுபடுத்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்