/ கதைகள் / ஓர் எல்லையற்ற நொடிப்பொழுது

₹ 400

ஒடியா மொழியில் வெளியாகி, சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தடைகள், சவால்கள், அதை கடக்க எடுக்கும் முயற்சிகளின் தெளிவான படப்பிடிப்பாக கதைகள் அமைந்துள்ளன. சமூகத்தில் ஏற்படும் துக்கங்களை எதிர்கொண்டு துடைத்தெறியும் பாங்கு மென்மையாக வெளிப்பட்டுள்ளது. உன்னத எண்ணங்களுடன் நடக்கும் மனித நேய செயல்பாடுகளை பல கோணங்களில் காட்சிப் படுத்துகின்றன. சமூகத்தில் சிக்கல்களால் ஏற்படும் வலி உணர்வை எதிர்கொள்வதில் உள்ள திறன்கள் பற்றி பேசுகின்றன. புரிய வைக்கும் மொழி நடையில் அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ஒளி


முக்கிய வீடியோ