/ கதைகள் / ஒரு கதை - ஒரு கருத்து (தொகுதி – 3)
ஒரு கதை - ஒரு கருத்து (தொகுதி – 3)
ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி உட்பட, 20 எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி கூறும் நுால். வாசித்த சில நாட்களில் மறந்து போகும் நிலையில் நினைவில் பதியும் கதைகளை பகிர்கிறது. ஒரு எழுத்தாளரின் மூன்று கதைகளை, பகிர்ந்து கொடுத்து வாசித்து கலந்துரையாடும் அனுபவத்தை கூறுகிறது. எட்டு வயது குழந்தை எழுதிய கவிதையில் நனைந்த அனுபவத்தை பகிர்கிறது. ஒரு கதையில் பெண்ணின் வறுமை, சோகம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி கூறப்பட்டுள்ளது. அசோகமித்திரன் கதையின் வியப்பை பேச வைக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக ராணுவ வீரர், ரயில் பயணத்தில் விதைக்கும் மாற்றத்தை கூறுகிறது. படைப்புகள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை சொல்லும் நுால்.– டி.எஸ்.ராயன்