/ கட்டுரைகள் / ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்
ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்
பரவசம் தரும் காட்டு அனுபவத்தை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இயற்கையை நெருங்கி நேசிக்கத்தக்க அணுகுமுறையை இயல்பான நடையில் தருகிறது.காட்டின் நடைமுறை, அதற்குள் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அனுபவங்களில் இருந்து கற்று வெளிப்படுத்துகிறது. உயிரினங்களை நோக்கும் அணுகுமுறையும் விவரிக்கப்பட்டுள்ளது. காட்டின் உயிர் துடிப்பை எடுத்துரைக்கிறது.யானை, பாம்பு, பறவை மற்றும் தாவரங்கள் குறித்த விபரங்களை மனதில் பதிக்கிறது. காட்டை அறிய உதவும் நுால்.– ஒளி