/ மருத்துவம் / ஒரு மருத்துவரின் சமுதாயப் பார்வைகள்

₹ 160

பக்கம்: 312 கருத்துடன் காசு பார்க்கும் மருத்துவத் தொழிலில், பொறுப்புடன் சேவை ஆற்றும் டாக்டர் சரோஜா பழனியப்பன், 76 வயதில் எழுதிய அனுபவப் பதிவுகள், இந்த நூலைப் படிப்பவரை ஆச்சரியத்தில் வீழ்த்தும்.மருத்துவ மாமேதை மேற்கு வங்க முதல்வராக, 12 ஆண்டுகள் இந்த பி.சி. ராயின் தியாகத்தை வணங்கி, நூலைத் துவங்குகிறார். தலைவலி பற்றி நாடகப் பாங்கில் நல்ல தகவல் தந்துள்ளார். நீரிழிவு, நோயல்ல என்பதை இனிப்பாக எழுதியுள்ளார். சிரிப்பு மருத்துவத்தின் சிறப்பையும், மனநல மகத்துவத்தையும், சுகப்பிரசவம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் போன்ற தலைப்புகளை சிறப்பாக எழுதியுள்ளார்.சமுதாய உயர்வுக்கும், குடும்ப நலத்திற்கும், தனிமனித ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டும் மருத்துவத் தோழன் இந்தநூல்!


புதிய வீடியோ