/ கதைகள் / ஒரு பிறை நிலா பௌர்ணமியாகிறது

₹ 80

குடும்ப உறவுகளின் மகத்துவத்தை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மதமாச்சரியம் கடந்த மனித நேயத்தையும், இறை பக்தியின் உன்னதத்தையும் முன்வைக்கிறது. மண் வளம் காத்து சமுதாய உயர்வுக்குப் படிக்கல்லாய் விளங்கும் பேராசிரியர் குடும்ப மாண்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமியார் மீது வெறுப்பு கொண்ட மனைவிக்கு பாடம் கற்பித்த கணவன், மாமனாரை புரிந்து கொண்ட மருமகள் என பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.அட்டைப் பூச்சியாய் தாயின் உழைப்பை உறிஞ்சிய தந்தைக்கு, மகன் கற்பித்த பாடம், திருக்குறளின் உன்னத பொருளை உணர்த்தும் வகையில் உள்ளது. போதையால் சீரழியும் குடும்ப அவலமும் சித்தரிக்கப் பட்டுள்ளது. உறவுகளின் உன்னதத்தை விளக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை