/ சிறுவர்கள் பகுதி / ஒரு சாமானியனின் பாப்பா பாடல்கள்
ஒரு சாமானியனின் பாப்பா பாடல்கள்
மனித மனதில் மெல்லிசையாக மலர்ந்துள்ள பாடல்களின் தொகுப்பு நுால். எளிய சொற்களில் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பாரதியார் படைத்துள்ள காலத்தால் அழியாத பாடல்களை நினைவூட்டும் வகையில் உள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன் இனிமை பயக்கும் விதமாக உள்ளன. தன்னம்பிக்கை தேசபக்தி கருத்துக்கள் மிகுந்துள்ளன. சமூக பிரதிபலிப்புகள் மற்றும் தாலாட்டு பாடல்கள் நிறைந்துள்ளன. புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் முன்னிலை படுத்துகின்றன. கடிகாரங்கள், பணம், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் அன்பான குழந்தையின் தருணங்கள் போன்ற தலைப்புகளில், 101 பாடல்களின் தொகுப்பு நுால். – வி.விஷ்வா