/ கதைகள் / ஒவ்வொரு நெல்லும் கந்தப்பனின் உழைப்பைச் சொல்லும்! (புதினம்)

₹ 110

விவசாயத்தின் தேவையையும், மேன்மையையும் எடுத்துரைக்கும் நாவல். பட்ட கடனுக்காக விளைந்த நெல் மூட்டைகள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நிற்கும் அவல நிலையுடன் காதல், பாசம், நட்பை சொல்கிறது. குடும்ப நாவல் என்ற தகுதியைப் பெற்றாலும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. பன்னிரண்டு அத்தியாயங்களில் எளிய மொழி நடையில் அமைந்துள்ளது. எடுத்ததும் படித்து முடிக்கும் வகையில் அமைத்துள்ளார். கந்தப்பன், வேம்பு, முத்துக்கோதை, தக்கடயன், மூக்கரயன் என்பவை ஒரு நுாற்றாண்டுக்கு முன் கிராமத்தை அலங்கரித்த பெயர்கள். அவற்றை நாவலில் அணிவகுக்கச் செய்தது பண்பாட்டுப் பதிவாக அமைந்துள்ளது. இடையிடையே பொடி துாவுவது போல அரசியலையும், தமிழ்ப் பற்றையும் விதைத்து விழிப்புணர்வை காட்டியுள்ளார். சுவாரசியமாக அமைந்த நாவல்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை