/ வாழ்க்கை வரலாறு / படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

₹ 80

பெருந்தலைவர் காமராஜரின் அரிய குணங்கள் விவரிக்கப்பட்டுள்ள நுால். எளிமையின் சிகரமாய் வாழ்ந்ததற்கு ஏராளமான தகவல்களும், எடுத்துக்காட்டுகளும் தரப்பட்டு உள்ளன. கொள்கை கோமானாக அரிய சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன.விளம்பரத்தை தகுதி தடை என்று கருதினார். அது எப்படி என்ற செய்தி உள்ளது. தொண்டர் கொடுத்த திருமண அழைப்பிதழை காமராஜர் கையாண்டது வியக்கச் செய்கிறது. திருச்சி பெல் நிறுவனம் பற்றிய தகவல் உள்ளது. கண்ணியம் காத்த கர்மவீரர் கட்டுரையை படித்தவுடன், நல்லோர்களுக்கு தெய்வம் எப்படி துணை நிற்கும் என புரிகிறது. அதிசய மனிதரைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை