/ கட்டுரைகள் / பெ.சு.மணி ஆய்வுக் கட்டுரைகள்

₹ 185

பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 488) கட்டுரைகளையே ஓர் ஆய்வேட்டிற்கான தரத்துடன் தருபவர் பெ.சு.மணி. இவர் கட்டுரைகளில் தான் எழுதிய செய்திகளைத் தக்க ஆதாரங்கள் தந்து நிலை நாட்டுவார். அதற்கு இந்நூலே சான்றாகும். காய்தல் - உவத்தல் இன்றி இவர் கட்டுரைகளில் செய்திகள் இருக்கும் என்பதை இந்நூலில் 1831 முதல் 1941 வரை தமிழ் இதழ்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளில் இருந்து நாம் உணரலாம். இந்நூலில் 24 கட்டுரைகள் உள்ளன. அவ்வையாரின் 55 தனிப் பாடல்களை மூதறிஞர் ராஜாஜி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்றும் (பக்.316), பாரதியாரின் "பாஞ்சாலி சபதம் சமஸ்கிருத மொழியில் பட்ட நாராயணன் என்பவர் எழுதிய கவிதை நாடகமான "வேணி சம்ஹாரம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது என்றும் (பக்.354), புரட்சி வீரன் குதிராம்போஸ் தண்டனை பெற்ற வரலாற்றுச் செய்தியும் (பக்.393) நூலாசிரியரால் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன.இக்கால இளைஞர்கள் படிக்க வேண்டிய பல நல்ல செய்திகளை இந்நூலில் காண்கிறோம்.


முக்கிய வீடியோ