/ இலக்கியம் / பள்ளு இலக்கியத் திரட்டு
பள்ளு இலக்கியத் திரட்டு
பக்கம்: 192 பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும், 96 பிரபந்தங்களுள் ஒன்று பள்ளுஇலக்கியம். ""நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில், கடவுள் வணக்கம், மூத்த பள்ளிவரல் இப்படியாக "பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என, 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது.19 பள்ளு நூல்களில் இருந்து (முக்கூடற்பள்ளு, கஞ்சமி செட்டியார் பள்ளு, நரசிங்கப்பள்ளு, கதிரை மலைப் பள்ளு இப்படி) பல்வேறு வகையான பாடல்கள், இதில் திரட்டித் தரப்பட்டுள்ளன. பள்ளு இலக்கிய வகை பற்றி அறிந்து கொள்ள, இந்நூல்பெரிதும் உதவும்.