/ வரலாறு / பண்டைக்கால இந்தியா
பண்டைக்கால இந்தியா
பக்கம்: 288 இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942 - 43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது, எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் பெற்றான் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது.ஆதிகாலத்தில் அமைந்த வாழ்க்கைமுறை, கூட்டுக்குடும்பம், தனிச்சொத்துரிமை இல்லாதநிலை முதலியவற்றை ஆசிரியர் விளக்குகின்றார். மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப் பெற்றமையால், கி.மு.மூவாயிரத்திலேயே நம் இந்திய நாட்டில் நாகரிகம் சிறந்து இருந்தமை தெளிவாகின்றது. நம்நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ள உதவும் நூல்.