/ ஆன்மிகம் / பன்னிரு திருமுறைத் திருத்தலங்கள் (ஒரு வழிகாட்டிக் கையேடு)

₹ 300

பொதுவாக, தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள் என்று தான் நூல்கள் வெளியாகும். ஆனால், இந்த நூலாசிரியர், பன்னிரு திருமுறைகளிலும் உள்ள தலங்களுக்கு, வழிகாட்டிக் கையேடு வெளியிட்டுள்ளார். அதோடு, ஒவ்வொரு கோவிலுக்கும் கூகுள் வரைபடங்களை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து, அவற்றையும், கோவில் முகப்பு புகைப்படங்களையும் இணைத்துள்ளது மிகச் சிறப்பு.நூலாசிரியர் கோவில்களில் எடுத்த, 5,000 புகைப்படங்களை குறுந்தகடாக, இந்த நூலோடு சேர்த்து வெளியிட்டுள்ளதாக, முன்னுரையில் தெரிவித்துள்ளார். இந்த நூல் இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில், பன்னிரு திருமுறை அறிமுகம், கூகுள் வரைபடத்துடன் கூடிய தலங்கள் விவரம் அடங்கியுள்ளன. இரண்டாம் பகுதி, கோவில்கள் பற்றிய கூடுதல் தகவல்கள், கட்டடக் கலை தகவல்கள், கல்வெட்டு உள்ளிட்ட வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.‘காலப்போக்கில் பல இடங்களில் திருக்குளங்களும், கண்மாய்களும் பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன’ (பக். 206, 207) என, யதார்த்தத்தையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.– விகிர்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை