/ ஆன்மிகம் / பரம்பொருளை அடைய பக்தர்கள் காட்டும் வழிமுறைகள்!

₹ 200

ஆன்மிகத்தில் பிரேம பக்தி, ஐக்கிய பாவம் என பல்வேறு நிலைகள் பற்றி விளக்கமாக சொல்லும் நுால்.பகவான் ராமகிருஷ்ணர், மாணிக்கவாசகர், தாயுமானவர், அபிராமி பட்டர் வாழ்க்கை வரலாற்றில் உள்ள துாய சிந்தனைகளை போதிக்கிறது. தேக அபிமானம் இருக்கும் வரை சிவதரிசனம் வெளிப்படுவது இல்லை; அருளை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் சிவ சாநித்தியம் வாய்க்கப்பெறும் என்று உரைக்கிறது. சித்தம் ஒடுங்கிய நிலையில் ஜீவன் பெருவெளியில் கலப்பதை தாயுமானவர் பாடல் வழி விளக்குகிறது. பாராயணத்திற்கு உகந்த பாடல்களை பார்வைக்கு வைக்கிறது. தஞ்சாவூர் அரண்மனையில் நெல் கொடுக்கும் ‘குருணி களமானியம்’ பற்றிய தகவலையும் தரும் நுால்.– சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ