/ கட்டுரைகள் / பரத கண்ட புராதனம்

₹ 95

பக்கம்: 136 டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போது தமிழ் கற்று , சிறப்படைந்து நூல்கள் எழுதியவர். கால்டு வெல் ஒப்பிலக்கணம் உட்பட அவரது நூல்கள் , பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது வரலாறு.அந்த வகையில் இந்த நூலும், காலங்களை தாண்டி இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் வாழ்வதை உணராமல், பழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.பண்டித நேரு எழுதிய "டிஸ்கவரி ஆப் இந்தியாவில், ""உலக நாடுகள் பலவற்றில் வாழ்ந்த மனிதர்கள், ஆடையின்றி மிருகங்களை போல வாழ்ந்த நாட்களில் "மஸ்லின்துணி அணிந்து, மேம்பாடு உடைய நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்றிருக்கிறார். ஆங்கில அறிஞர்கள் அரைகுறை கருத்துக்களையும், பிரிட்டிஷார் ஆதிக்க உணர்வையும் ஏற்க முடியாமல், அவ்வாறு அவர் விமர்சித்தார்.இதிகாசங்களையும், புராணங்களையும் தற்போது மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து, அது இக்கால நிர்வாகத் திறன் வாழ்வுடன் இணைந்து இருப்பதாக பேசும்போது, கால்டுவெல் தமிழில் எழுதிய இந்த நூல் , பழம் கருத்துடன் வெளிவந்திருப்பது வியப்பாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை