/ கதைகள் / பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள்
பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள்
கந்த புராண செய்திகளை எளிமையாக கதை வடிவில் சொல்லும் நுால். வடமொழியில் உள்ள 18 புராணங்களில், ஸ்காந்தம் என்பதை ஆறு காண்டங்கள், 10,000 பாடல்களாக பாடியுள்ளது குறித்து விளக்குகிறது. அரக்கன் சூரனை அழித்து உலகை காக்க வேண்டிய தேவர்களின் வேண்டுகோளை சிக்கலில் வேல் வாங்கி, திருச்செந்துாரில் முருகன் நடத்தியதை குறிப்பிடுகிறது. முருகனுக்கு வேல் வழங்கும் அம்பிகை பற்றி மார்கண்டேய புராணத்தில் உள்ள செய்தியை சான்றாக சொல்கிறது. அகத்தியர், மார்கண்டேயர் துணை கதைகளும் உள்ளன. ஆறுபடை வீடு, மருதமலை, குருந்தமலை பற்றிய பாடல்கள், போற்றிகள், கந்த புராண பாடல்களும் தரப்பட்டுள்ளன. படங்களுடன் வந்துள்ள பக்தி நுால். – முனைவர் மா.கி.ரமணன்




