/ கதைகள் / பரிபாகம்

₹ 250

மாறுபட்ட சூழலில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். வேறுபட்ட கருவை கொண்டுள்ளன. உலக நடப்புகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திர உரையாடல், கதை நிகழ்விடம் சங்கிலித்தொடர் போல அமைந்துள்ளன. சிக்கலும், கதை முடிவில் தீர்வும் அமைந்துள்ளன. ஆழி, காத்திருக்கும் நதிகள், பரிபாகம், அரியணை, அறம், தொட்டி மீன்கள், ஒரு துண்டு வாழ்க்கை போன்ற 11 தலைப்புகளில் உள்ளன. வாழ்வின் யதார்த்தத்தை படம் பிடிக்கிறது. அறத்தின் வழி நடந்தால், சிறப்பான வாழ்வு அமையும் என்கிறது. அகதிகளின் நிலையும் விளக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற அபலைக்கு உதவும் உள்ளம் போற்றப்படுகிறது. மரணம் தவிர்க்க முடியாதது என பிரதிபலிக்கிறது. எளிய நடையில் படிப்பவரை வசப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை