Advertisement

தாயினும் சாலப் பரிந்து...


தாயினும் சாலப் பரிந்து...

₹ 420

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

ஆன்மிகத் தேடலையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், உளவியல் நுட்பங்களையும் எத்தனையோ கதைகள் இதுவரை பேசியிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ‘ஒரு எழுத்தாளரே தான் படைத்த கதாபாத்திரங்களை நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும்’ என்ற விசித்திரமான கோணத்திலிருந்து ஆன்மிகம், உறவுகள், உளவியல் ஆகியவற்றை பார்க்கிறது, தாயினும் சாலப்பரிந்து நாவல். யதார்த்தமும் கற்பனையும் ஒன்றுகின்ற ஒரு புள்ளியிலிருந்து நேர்கோடாக கதை ஜனிக்கிறது. அந்த நேர்கோடு தான் அன்பு என்று தெரியும்போது சிலிர்த்து போகிறோம். அந்தச் சிலிர்ப்பு, கதையின் கடைசி வார்த்தை வரை நீடிக்கிறது. கதையில் எத்தனை எத்தனை அன்பின் அற்புதங்கள். கதாசிரியர் எழுதிய உறவுப் பாலம் கதா பாத்திரங்களை எல்லாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கிறார். எழுத்தாளரிடம், ‘ஒரு வகையில் நீயும் நானும் ஒரே மாதிரியான தொழிலைத்தான் செய்கிறோம்...’ என்று பச்சை புடவைக்காரி சொல்லும்போது அதிர்ச்சி அடைகிறோம். ‘நீ உருவாக்கும் பாத்திரங்கள் உன் மனதில் உருவாகின்றனர்; உன் மனதிலேயே வாழ்கின்றனர். கதை முடிந்தவுடன் அவர்கள் விதியும் முடிந்துவிடுகிறது. அதுபோலத்தான் நான் படைக்கும் பிரபஞ்சங்களும். அவை என் மனதில் உருவாகின்றன. மனதிலேயே வாழ்ந்து, வளர்ந்து உரிய காலத்தில் அழிந்தும் விடுகின்றன...’ என்று பச்சை புடவைக்காரி விளக்கும்போது ஏற்படும் பரவசம். இது வார்த்தையில்லாத கவிதை. திருச்சியில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து, விபத்தில் தாயை இழந்து நிலை தடுமாறி, பின்னர் அபிராமி அந்தாதி துணையோடு மீண்டெழும் அழகான உள்ளம் கொண்ட மன நல மருத்துவராக டாக்டர் சத்யா; உண்மை காதல் இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்தும் சாரதா-சேது தம்பதி; வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக, செயல் படுத்த முடியாத கோபத்தில் துடித்துக்கொண்டிருக்கும் அழகியாக, சாரதாவின் தங்கை சந்தியா; இளமையில் செய்த பாவங்கள் மனதை அழுத்த, மகள்களின் அன்பை இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலதிபர் ராமலிங்கம். இந்தக் கதை மாந்தர்களை அன்பெனும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் முக்கியமான பாத்திரமான மகாஸ்வேதா தேவியாக அந்தப் பராசக்தியே வருகிறாள். அண்ட சராசரங்களையே அடக்கியாளும் அன்பெனும் பிரவாகத்தின் உற்பத்தி ஸ்தானம் தான் பராசக்தி என்று உணரும்போது, மனம் கரைந்து போகாமல் இருந்தால் தான் ஆச்சரியம். மன நல மருத்துவத்துக்கும், ஆன்மிகத்துக்கும் இடையே மெல்லிய கோட்டில் கதை நர்த்தனமாடுகிறது. அது ருத்ர தாண்டவம் இல்லை. மனங்களை அமைதிப் படுத்தும் சக்தி தாண்டவம். காதலை வெளிப் படுத்த ஆடைகளை களைகின்றனர்; சதையை காட்டுகின்றனர்; ஆவேசமாக தழுவுகின்றனர். அடுத்த இரண்டு நிமிடங்களில் உலகமே அழியப்போவது போல் வன்முறையோடு முத்தமிடுகின்றனர். வாழ்க்கையில் சந்திப்போரை எல்லாம் பச்சை புடவைக்காரி வடிவமாக பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் யார் மீதும் கோபம், எரிச்சல், மனக்கசப்பு வராது. கதை சொல்லி வைத்தியம் என்பதை ஒரு சிகிச்சை பிரிவாகவே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் கதாசிரியர். பொழுது போகவில்லையே என்று சலித்து இந்த புத்தகத்தை கையில் எடுக்காதீர். பாடம் கற்க... ஆன்மிக அனுபவம் பெற... அன்பின் தேடலில் அடுத்த நிலை அடைய, ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தை படியுங்கள். – சுமித்ரா தேவி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ஜெய் சக்தியின் நாவல்களில் ஒரு மென்மையும், இதமும் உண்டு!காதலிக்கும், பெண்ணின் சகோதரருக்கும் பல சலுகைகளை வழங்கிவிட்டு, அதனால் பல சங்கடங்களுக்கு ஆளாகும் ஒரு தொழில் அதிபரின் கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறார்.பழைய பீம் சிங் திரைப்படத்தைப் பார்ப்பது போல், இதமளிக்கும் குடும்பச் சித்திரம்!ஸ்ரீ செல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14.

  • துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. விலை: ரூ.100. பக்கம்(2): 288.

  • கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248)பிரபல நாடக எழுத்தாளரான விக்டர் தனது மனைவி, குழந்தை, வேலைக்காரன் மற்றும் நாயுடன் பண்ணை வீட்டில் தங்கி தனது அடுத்த படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது வேலைக்காரனையும், நாயையும், துப்பாக்கிகளையும் காணவில்லை. தொலைபேசி வேலை செய்யவில்லை. காரின் ஸ்பார்க் பிளக்குகளும் காணவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் மர்ம நாவலின் ஆரம்பமே இப்படி நெஞ்சை உறைய வைக்கிறது. நூலைப் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும்.மர்ம நாவல் பிரியர்களுக்கு தமிழில் ஜேம்ஸ் ஹார்ட் சேஸின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பை கண்ணதாசன் பதிப்பகம் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.

  • கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. பக்கம்; (2) 288) துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பணக்காரரான லியோனைட் எனும் எண்பது வயதைக் கடந்த தாத்தா இல்லாமல் இருக்கவே முடியாது என்ற பாசப் பிணைப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். எதிர்பாராது லியோனைட் மரணிக்கிறார். இயற்கையாய் அல்ல, விஷம் வைத்து. யார், எதற்காக அத்தனை முதியவரைப் போய் ஈவிரக்கமின்றி கொன்றது? இக் கேள்வியைத் துரத்திக் கொண்டு துப்பறிதல் சூடு பறக்கத் துவங்குகிறது. எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத ஓர் அற்புத த்ரில்லர்தான் குரூர வீடு.

  • காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 177). "நவீன ஓவியம்' படைப்பு, படைப்பாளர், பார்வையாளர், நிலைப்பாடுகளை முன்னிறுத்தி நவீன ஓவியர்களிடமும் படைப்பு - படைப்பாளர் குறித்து கலை இலக்கிய விமர்சகர்களாக அறியபட்டவர்களிடமும் நேரில் சந்தித்தும் விடைபெற்றதும் நூல் வடிவம் பெற்றுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த கலை விமர்சனக் கட்டுரைகள் தமிழுக்குப் புதிது; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதற்கு நிதி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகம் ஓவியக் கலைஞர்களைப் பற்றியது. சிறப்பான தகவல்களின் பெட்டகம். படித்துப் பாருங்கள். பாராட்ட வார்த்தைகளைத் தேடுவீர்கள்

  • ஸ்ரீ செண்பாக பதிப்பகம், 34 பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை- 17நாமக்கல் கவிஞர் சிறந்த தேசியக் கவிஞர் என்பது எல்லாரும் அறிந்த செய்தி. கவிஞரவர்கள் சிறந்த கதையாசிரியரும் ஆவார். "மலைக் கள்ளன்' என்ற இவரது கதை சிறந்த திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது.இந்நூலுள் கவிஞர், தம் தந்தையார் சொல்வது போலவும், தாயார் சொல்வது போலவும் கதைகள் படைத்துள்ளார். சங்கிலிக்குறவன், கோவில் திருட்டு, இலுப்ப மர பிசாசு எனும் கதைகள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், கேட்டறிந்த சுவையான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். உணர்வும், உற்சாகமும் தரும் தமிழ் நடை. யாவரும் படித்துச் சுவைக்க வேண்டிய நூல் இது.

  • பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104). சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயர்வு என்பர். சிறு வயதிலேயே அவர்கள் மனதில் நல்லதை விதைத்து விட்டால், அது செடியாக, மரமாகி அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கச் செய்யும் என்பது கண்கூடு. இந்நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு நீதியை சொல்கின்றன. சிறுவர்களை நல்வழிப்படுத்த இத்தகைய நூல்கள் பயன்படும் என்பது நிதர்சன உண்மை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கி, படிக்க கொடுங்கள்.

  • ஸ்ரீசெல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 225)இரண்டு குறு நாவல்கள் அடங்கிய தொகுதி. பாப்புலர் மாத நாவல் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட நாவல்கள்."பூ ஒன்று பூத்தது' - நாவலின் கதாநாயகன் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் போனதற்குக் காரணம், மூட நம்பிக்கையே என்று நிறுவுகிறார். "திசை மாறிய பறவை' - என்ற நாவலில் கல்யாணம் ஆகும் முன்னரே கன்னிப் பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதால் நிகழும் கேடுகளைச் சொல்கிறார்.சில இடங்களில் கவிதா பூர்வமான வர்ணனைகள் நாவல்களுக்குத் தனி அழகைத் தருகின்றன.

  • மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447. 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 284)புதினம் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளும், ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகளுமாக இத்தொகுதியில் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுதியவர்கள், கனடா, சுவிஸ், இலங்கை, தமிழகம் என பல நாட்டவர். எனவே கதைக் களங்களும், உலகளவில் உள்ளது. பல கதைகள் இலங்கைத் தமிழில் இருப்பினும் புரிந்து கொண்டு படித்து ரசிக்க முடிகிறது. பன்னாட்டு சிறுகதை விருந்து.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • படைப்பாளியாக தான் உருவாகக் காரணமான சிங்கப்பூர் நகருக்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வித்தியாசமானது. புதுமையானது வாசகராக இருந்து நிறைய நூல்களை படித்து 1995ல் எழுத ஆரம்பித்து, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதி பரிசும் பெற்றுள்ள இவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.சிங்கப்பூர் கதைக்களத்தில் சீனக்கிழவி வருகிறாள். மலாயக்காரர்கள் வருகின்றனர். கலாசாரம் சங்கமம். நமக்கோ வித்தியாசமான கதைகள் கிடைத்துவிட்டன. ஆசிரியையின் எழுத்துப்பணி சிறக்க படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாழ்த்துவர்.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (குறிஞ்சி மலர்-பக்கம்: 387)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.(பொன்விலங்கு - பக்கம்: 615)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. ( பாண்டிமா தேவி - பக்கம்:640)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017

  • உஷா முத்துராமன். வெளியீடு: மணிமேகலை பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 186.). 25 குடும்பப்பாங்கான சிறுகதைகள். ராஜேஷ்குமார், தேவிபாலா இச்சிறுகதைகளை பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளதன் மூலம் சிறுகதைகளின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).திருக்குறளின் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் காதல் பாலைக் கலந்து தரப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். 26 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பொருத்தமாகக் காதல் கதைகளை உருவாக்கியுள்ளார் கவுதம். சாதாரணமாக வரும் குறள் நெறிக் கதைகளைப் போல் அல்லாமல் இயல்பான தன்மையுடன் இவை எழுதப்பட்டுள்ளதால் எல்லாத் தரப்பினரையும் கவரும் எனலாம்.