பரிசு பெறாத பாரதி பாடல்
106, எப்/4ஏ, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-627 002. (பக்கம்: 106) செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே எனும் பாடல் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த பாடலாகும். என்றாலும், பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு பாடல் போட்டியில் இந்த பாடல் பரிசுபெறத் தவறி விட்டது.பரிசுபெற தவறி விட்ட பாரதியின் பாடல், எந்த சூழ்நிலையில் அந்த போட்டி நிகழ்ந்தது. அந்த போட்டியில் கலந்துகொண்டவர்கள் யார், யார் இது குறித்து பாரதி ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் ஆய்வில் பெற்ற சான்றுகளை விரிவாகவே இந்நூல் வாயிலாக தந்துள்ளேன் என்று ஆசிரியர் கூறியுள்ளார்.பாரதி பற்றிய மற்றுமொரு ஆய்வு நூல், இந்தியக் கும்மி ஆ.மாதவையர் இயற்றியது. இரண்டாம் பதிப்பு சென்னை சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1916ல் விலை அரை அணா என்று கடைசி பக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.