/ கட்டுரைகள் / பாசப் பறவைகள்
பாசப் பறவைகள்
வாழ்வியல் அனுபவங்களையும், யதார்த்த நிகழ்வுகளையும் கருத்துரைகளாக முன்வைக்கும் நுால். இரு பாசப் பறவைகளை கதாபாத்திரமாக்கி தொகுத்து தரப்பட்டிருக்கிறது.வாழ்வு செம்மையாக இருக்க கடமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முன் வைத்திருப்பது புதுமையாக இருக்கிறது. ஐம்பதாவது கட்டுரையில் பறவைகளுக்கு சுதந்திரம் தந்திருப்பது அழகு.இல்லறம் நல்லறமாக திகழ்வதையும், முதுமை மூப்பல்ல என்பதையும், அன்னையின் அருமை பெருமைகளையும், இசையின் மகிமைகளையும், பயண அனுபவங்கள், இலக்கிய வளம், தொழில் வளம், ஈகையின் மாண்பு, கல்வியின் மேன்மை என தேர்ந்த அனுபவங்களை காட்டுகிறது. பயணக்கதை போல் கருத்துகளை சொல்லியிருப்பது தனித்துவமாக இருக்கிறது.– ஊஞ்சல் பிரபு