/ கட்டுரைகள் / பசுமைப் புரட்சியின் கதை
பசுமைப் புரட்சியின் கதை
பக்கம்: 254 இந்திய வரலாற்றில், வேளாண் துறையில் மிகுந்து பாராட்டிப் பேசப்பட்டது, பசுமைப் புரட்சி. உலகமே கண்டு வியந்த கனவுகளில், ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும், தாக்கங்களையும், இந்நூல் கேள்விக்கு உட்படுத்தி, ஆசிரியரது நோக்கிற்கு எது சரி எனப்பட்டதோ, அதை எழுத்துச் சுதந்திரத்தோடு பதிவு செய்துள்ளார்.பசுமைப் புரட்சியின் நாயகர் என, முன்னாள் அரசின் உணவு அமைச்சராக இருந்த, சி.சுப்ரமணியம் பாராட்டப் பெற்றார். அத்தகையப் பசுமைப் புரட்சியின் வரலாற்றின் சாதக, பாதங்களையும் சற்று கடுமையாகவே, இந்நூலில் சாடியுள்ளார் நூலாசிரியர். விமர்சனங்கள் நிராகரிக்கப்படுவன அல்ல, அந்த வகையில் வேளாண் துறை சார்ந்த ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்நூல் துணை செய்யலாம்.