/ உளவியல் / பதற்றம் – காரணிகளும் தீர்வுகளும்
பதற்றம் – காரணிகளும் தீர்வுகளும்
காரணமே இல்லாமல் பதற்றத்தில் இருப்பவர்களை மீட்க உதவும் நுால். எளிய நடையில் 55 தலைப்புகளில் அமைந்துள்ளது. பதற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்து, ஏற்படுத்தும் விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது. எண்ணங்களை சீரமைப்பது, அபாய சிந்தனைகள், பதற்றத்திற்கான காரணங்கள், சிந்தனையை சிதைக்கும் எண்ணங்கள் எதனால் ஏற்படுகிறது என அலசுகிறது. சமூக செயல்பாடுகள், ஊடகங்களில் வரும் காட்சிகள், உறவினர் செயல்களால் வரும் பதற்றத்தையும், அதை தவிர்ப்பது, கவனத்தை திசை திருப்புவது எப்படி எனவும் கூறுகிறது. பதற்றத்துடன் தொடர்புடைய கவலை, பயம், மனச்சோர்வு பற்றி விவரித்து, அவற்றில் இருந்து வெளிவர கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளை தருகிறது. பதற்றத்திற்கு தீர்வு தரும் நுால். – சிவா




