/ கதைகள் / பாதையில் கவனம்
பாதையில் கவனம்
சிறந்த நீதிகளை சிறுவர்களுக்கு சிறுகதைகள் மூலமாக புகட்டுவதற்கு உதவும் நுால். கசக்காத மருந்து, பாதையில் கவனம், அன்பு இருந்தால் எனத் துவங்கி நிச்சயம் பலன் உண்டு, பழகாத ஆயுதம் என 15 கதைகளை கொண்டுள்ளது.கதையை மட்டுமல்லாமல் இறுதியில் அக்கதைக்கான நீதிகளையும் கூறுகிறது. ‘பாதையில் கவனம்’ என்ற தலைப்பிலான கதையில், பொது அறிவுத் தேர்வில் மூன்றாம் இடம் பெற்ற விஷ்ணு என்ற மாணவனிடம், செய்த சிறு தவறை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. கற்றதை நினைத்து ஆணவம் கொள்ளக்கூடாது என்ற நீதியை புகட்டுகிறது. ஒவ்வொரு கதைக்கும் நீதியை கூறி முடிப்பது சிறப்பாக உள்ளது.– வி.விஷ்வா