/ தமிழ்மொழி / பதினெண் கீழ்க்கணக்கு நானாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு நானாற்பது
கபிலர் இயற்றிய இன்னா நாற்பது, பூதன் சேந்தனார் அருளிய இனியவை நாற்பது, மதுரை கண்ணன் கூத்தனார் எழுதிய கார் நாற்பது, பொய்கையார் பாடிய களவழி நாற்பது ஆகியவற்றுக்கு பொருளுரை, கருத்துரை தரும் நுால். இலக்கணக் குறிப்புகளும் இடம் பெற்று உள்ளன. அக இலக்கியமாகிய, கார் நாற்பது நுாலின் ஒவ்வொரு வெண்பாவும் யாருடைய கூற்று, எந்த துறை சார்ந்தது என்பது சுட்டப்பட்டு உள்ளது. சோழன் செங்கண்ணனால் சிறைபிடிக்கப்பட்ட, கணைக்கால் இரும்பொறையை விடுவிக்க பாடியதே களவழி நாற்பது என்ற வரலாற்றுக் குறிப்பும் பதிவிடப்பட்டுள்ளது. பொய்கை பற்றிய அழகான காட்சி ஒன்று களவழி நாற்பது பாடலில் இடம் பெற்றிருப்பது, பெயர் பொருத்தம் காட்டுவதாக சுட்டப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்