/ வாழ்க்கை வரலாறு / பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாற்றை கவிதையாக தரும் நுால். உழைக்கும் மக்கள் உரிமைக் குரலாக விளங்கிய கவிஞரின் படைப்புகள் போல் எளிய நடையில் அமைந்துள்ளது. கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் சிறு சிறு கவிதைகளில் புனைந்து காட்டப்பட்டுள்ளன. கவிஞரை, ஒரு பல்கலைக்கழகம் என அறிமுகம் செய்கிறது. கவிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், சொல்லேர் உழவர், பேரழகன் என கவரும் தலைப்புகளுடன் கவித்துவமாக கூறப்பட்டுள்ளன. எளிய மக்களின் மனசாட்சியாகவும் படைப்புகளை அடையாளம் காட்டுகிறது. பாடல்களில் பொதிந்துள்ள தத்துவத்தை அறிமுகம் செய்கிறது. மக்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாற்று நுால். -– மதி




