/ இசை, இயல், நாடகம் / பாவைப் பாட்டுக்கள்
பாவைப் பாட்டுக்கள்
பட்ட மேற்படிப்பு தொடர்பாக ஆய்வு செய்து எழுதியுள்ள நுால். கடவுள் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கையுள்ள மக்களுக்காக எழுதப்பட்ட ‘பாவைப்பாட்டு’ ஆராய்ச்சி உரையுடன் அமைந்துள்ளது. ‘கொன்றை வேய்ந்தவன்’ என்ற சொல், கொன்றைவேந்தன் ஆனது போல், ‘பார்வை’ என்ற சொல்லே, ‘பாவை’ ஆனது என குறிப்பிடப்பட்டுள்ளது. மார்கழியில் நோன்பு கொண்டாட காரணம் படித்து இன்புறத்தக்கது. மார்கழி நீராட்டும், தை நீராட்டும் ஒன்றா, வேறா எனவும் ஆராய்ந்து கருத்து கூறப்பட்டுள்ளது. கன்னிப்பெண்களுக்கு வாழ்வையும், வளத்தையும் பாவை உருவில் அமைத்து வழங்கிய தெய்வம் அன்னை பராசக்தி என்கிறது. குலம், மதம், கொள்கை வேறுபட்டாலும், பாவை உருவில் அன்னையை வணங்குவதே பாவைப்பாட்டு என நிறுவும் நுால். – சீத்தலைச்சாத்தன்




