/ பயண கட்டுரை / பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...
பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...
ஒரு பத்திரிகையாளராக, நீதியின் பக்கம் நின்று, தன் பேனா வாளை சுழற்றும் தைரியம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்த வகையில், தான் ஒரு பெண்ணாக இருந்தும், போருக்கு எதிரான அறப்போரை, தைரியமுடன் தொடுத்து, சிரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர், சமர் யாஸ்பெக். அவரின், ‘பயணம்’ என்னும் இந்நூல், ஜனநாயகத்தின் முதல் அமைதிப் பேரணியில் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின் ஊடுருவல் வரையான வாழ்வாதார போராட்டத்தின் சாட்சியாக இருக்கிறது.