/ கட்டுரைகள் / பயங்கரவாதமும் அடிப்படைக் காரணங்களும்!
பயங்கரவாதமும் அடிப்படைக் காரணங்களும்!
பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் நுால். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு காரணங்களை அலசி ஆராய்கிறது. சமூக, பொருளாதார ரீதியாக அடக்கப்பட்டோர் போராளியாக உருவெடுப்பது, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஆயுதம் ஏந்துவதை சொல்கிறது. மத நம்பிக்கையின் கீழ் கொண்டு வரும் வகையில் செயல்படுவது என ஒவ்வொன்றையும் பிரித்து பேசுகிறது. கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் தலைமறைவாக இருப்போருடன் வன்முறையாக பயணிப்பதை கூறுகிறது. வறுமை, வேலையின்மை முக்கிய காரணம் அல்ல என சுட்டிக்காட்டுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்