/ சுய முன்னேற்றம் / பழகத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னேறலாம்!
பழகத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னேறலாம்!
நடத்தையால் உயரிய மதிப்பீட்டை பெறுவோரால் தான், எதிலும் முன்னேற முடியும் என்பதை விவரிக்கும் நுால்.நடை, உடை, உரையாடல், சங்கடமான சூழலை எதிர்கொள்ளல், சமயோசித செயல்பாடுகள், நன்றி பாராட்டல், கருத்தை முன்வைத்தல், எதிர்ப்பை பதிவு செய்தல் என, ஒவ்வொரு செயலையும், எந்தெந்த இடத்தில் எந்த அளவிலும், வடிவிலும் வெளிப்படுத்த வேண்டும் என்பது உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளது.உலகெங்கும் ராணுவம், அரசியல், அதிகாரிகள் என உயரதிகார மட்டத்தில் உள்ளோருக்கு வழங்கப்படும் நன்னடத்தை கோட்பாட்டு பயிற்சிகளில் சொல்லப்படும் பாடத்தை, இந்தப் புத்தக வாசிப்பின் மூலம் கற்க முடியும்.– மேதகன்