/ தமிழ்மொழி / பழமொழி நானுாறு

₹ 160

பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால் இயற்றப்பட்டது. வாழ்வியல் நெறியை, ‘நறுக்’கென்று சுருக்கமாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பதியும்படி கூறப்பட்டு வருவதே பழமொழி. பட்டறிவைச் சாரமாக்கி ஐயத்திற்கு அப்பாற்பட்ட குறைந்த சொற்களால் பசுமரத்தில் அம்பைச் செலுத்துவதுபோல் கூர்மையாக வெளிப்படுத்தினர்.பாடல்களின் பொது இயல்பு, பாட்டின் இறுதியில் வைக்கப்பட்டிருப்பதோடு, முன் இரண்டு அடிகளில் பொருள் உணர்த்தப்படுவது சிறப்பு. பாடல்கள் பழமொழிகளின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. பண்டைய மன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் சுட்டப்பட்டுள்ளன. எளிய உரை வழங்கப்பட்டு உள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நுால்.– மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி