/ தமிழ்மொழி / பழந்தமிழ்ச் சுவடிகளில் கூட்டெழுத்துகளும் குறியீடுகளும்

₹ 600

பழந்தமிழ் சுவடிகளில் உள்ள எழுத்து முறைகளை ஆராய்ந்து, அகராதியாக தொகுத்து தரும் நுால். புத்தகத்தின் முதல் பகுதி, சுவடி எழுத்து முறை குறித்து ஆராய்கிறது. அதற்காக பயன்பட்ட கருவிகள், சுவடி அமைப்பு முறை என விரிவான தகவல்களை கொண்டுள்ளது. அடுத்து, பழந்தமிழர் அளவு முறை குறித்த செய்திகள் விரிவாக தரப்பட்டுள்ளன. அதற்கு உரிய இலக்கிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதி பகுதியில் பழந்தமிழ் எழுத்து நடைமுறை குறித்து ஆராய்ந்து குறியீடுகளை வகைப்படுத்துகிறது. அவை அகராதியாக தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழியின் பண்பாட்டு பயணத்தில் எழுத்து முறை குறித்து விரிவாக தகவல்களை தரும் சிறப்பான ஆய்வு நுால். – நிகி


சமீபத்திய செய்தி