/ பொது / பழந்தமிழர் மரபும் கலையும்
பழந்தமிழர் மரபும் கலையும்
பழந்தமிழர் வாழ்வு மரபுகளில் நுண்கலை சார்ந்த வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்து தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். கலைகளில் நாட்டம் உடைய மன்னர் ஆட்சி காலத்தில் மாளிகை, கோவில், மண்டபம், கோட்டங்கள் வகுத்து நிர்மாணிக்கப்பட்ட செய்திகளை அள்ளி தருகிறது. குறிப்பாக செஞ்சி நாயக்கர் கால கட்டடக்கலை, தாராசுரம் ஐராவதீசுரம் சிற்பங்கள், கலை அழகியல் கட்டடங்கள், ஓவியங்கள், நடன முத்திரைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பல்லவர்களின் கோவில் கட்டுமானம், சிற்ப நுட்பங்களை அறிய வைக்கிறது. விஜய நகரப் பேரரசின் பங்களிப்பை விளக்குகிறது. நடன முத்திரைகள், அபிநயங்களை படங்களுடன் தந்து புரிய வைக்கிறது. ஆய்வு நோக்கிலான நுால். -– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு