/ கதைகள் / பெருமழையின் முதல்துளி
பெருமழையின் முதல்துளி
எளிய மனிதர்களின் பேரன்பை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிரெதிர் கொள்கை உடையோர், ஒருவரை ஒருவர் அன்பு பாராட்ட முடியும் என, ‘சுடர்’ கதை எடுத்துரைக்கிறது. பிறர் மீது வைக்கும் நம்பிக்கையை, பூனை செயல்பாட்டுடன், ‘மஞ்சள் நிறத்தொரு பூனை’ கதை பகிர்கிறது. பிறர் துயரத்தை போக்க, பேரன்புடன் பழக, ‘திரை’ கதை சொல்கிறது. அர்ச்சகரான சிறுவனின் தன்மானத்தை கூறுகிறது ‘மாயநதி’ கதை. ஆட்டுக்குட்டிக்காக ஏன் மாணவி தேர்வை எழுதவில்லை என்பதை, ‘முனகல்’ கதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் மனநிலையை, ‘புழு’ கதை எச்சரிக்கையாக முன் வைக்கிறது. எளிய மனிதர்கள் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்




