/ இசை, இயல், நாடகம் / பி.லீலா திரையிசைப் பாடல்கள்

₹ 350

சினிமா பின்னணி பாடகி பி.லீலாவின் குரலில் பதிவான 273 பாடல்களை உடைய தொகுப்பு நுால். இரண்டாவது தொகுதியாக வந்துள்ளது. இதில், 273 பாடல்களும் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம், இசையமைப்பாளர், பாடலை இயற்றியவர், பாடியவர்கள், திரைப்படத்தில் நடித்தவர்கள் என விபரங்கள் துவக்கத்தில் அளிக்கப்பட்டு உள்ளன.அத்துடன், பாடல்கள் என்ன ராகத்தில் உள்ளன என்ற தகவலும் உள்ளது. பல பாடல்களின் துவக்கத்தில், அதற்கான சூழ்நிலை பற்றியும் முதலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. எப்படி பாடினார் என பாடலின் இறுதியில் அளித்துள்ள விளக்கம், புதுமை தகவலாக உள்ளது. சினிமா இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் தகவல்கள் அடங்கிய நுால்.– குமரன்


புதிய வீடியோ