/ கட்டுரைகள் / போலீஸ் புகார் மாதிரி மனுக்கள்!
போலீஸ் புகார் மாதிரி மனுக்கள்!
காவல் நிலையத்திற்கு புகார் மனுக்கள் எழுதும் முறையை தெரிவிக்கும் நுால். மாதிரி நகல்களும் தரப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை மனம் சார்ந்த விஷயம் என்று குறிப்பிடுகிறது. புகார் அளிக்கப் போகும் போது ஏன், எதற்கு, எப்போது, எப்படி, எங்கே, யாரால் என்ற வார்த்தைகளை மனதில் கொள்ள அறிவுறுத்துகிறது. உண்மை சம்பவங்கள் பெயர் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளன. ஒரு பிரச்னைக்கு இருவர் புகார் அளித்தால் கையாளும் விதத்தை சொல்கிறது. முதல் தகவல் அறிக்கை பற்றி விளக்குகிறது. ரசீது பெறும் முறையும் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்ட விபரமும் விளக்கி சொல்லப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை தீர்க்க உதவும் நுால். -– பேராசிரியர் ரா.நாராயணன்




