/ வாழ்க்கை வரலாறு / போலோ மகாத்மா காந்திக்கு ஜே!
போலோ மகாத்மா காந்திக்கு ஜே!
வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில், 33 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். பழைய சமூக முறைகளை அறியாமல் செயல்படுவது, வளர்ச்சிக்கு உதவாது என அறிவுறுத்தியுள்ளது. சங்க இலக்கியத்தில் ஆர்க்காடு பற்றிய பாடல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘போலோ மகாத்மா காந்திக்கு ஜெ’ என அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் எஸ்.டீ.கே.ராமநாயகர் வாழ்க்கை வரலாறு தனியாகக் கூறப்பட்டுள்ளது. இவரது வாரிசுகள், உறவினர் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ள நுால். -– முகில்குமரன்