/ கட்டுரைகள் / பூச்சிகளின் தேசம்

₹ 120

1447, அவினாசி ரோடு, பீளமேடு, கோவை-641 004. (பக்கம்: 160) சிறிய உயிரினங்களைப் பற்றிய பெரிய பார்வையை வீசி, பூச்சிகளின் தேசம் என்ற உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். இந்த உலகில் நம்முடன் சக உயிர் வாசிகளாக இருக்கும் பூச்சிகளைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும், தன்மைகளைப் பற்றியும் விஸ்தாரமாய் எடுத்துக் காட்டியிருக்கிறார்.மலைப் பயணத்தில் காடுகளைப் பற்றியும், அங்கு காணப்படும் நீரோடைகள் பற்றியும் மட்டுமல்லாது. அங்கு வசிக்கும் சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், தாவரங்கள் பற்றிய புதிய தகவல்களையும் அவற்றின் வகைகள், வாழ்க்கை சுழற்சி முறை பற்றியும் நன்கு விவரித்துள்ளார்.எறும்பு, ஈசல், தும்பி, வண்ணத்துப் பூச்சி போன்ற பல சிற்றுயிர்கள் நம் கண் முன்னே உருவெடுக்கின்றன. இயற்கையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சூழலில் சீர்கேடு பற்றிய அக்கறையும் பொங்கி எழ, இம்மாதிரியான நூல்கள் மிகவும் அவசியம். பாராட்டப்பட வேண்டிய முயற்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை