/ வாழ்க்கை வரலாறு / பூலான்தேவி
பூலான்தேவி
சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையராக இருந்த பூலான்தேவியின் வாழ்க்கை வரலாற்று நுால். பசுவுக்கும், சைக்கிளுக்கும் பண்டமாற்றாக, 11 வயதில் விற்கப்பட்டு, பல்வேறு அடக்கு முறைகளுக்கு உட்பட்டு, பின் கொள்ளையரானதை விவரிக்கிறது. பீமாய் கிராமத்தில் நடந்த கொடூரங்களை பகிர்கிறது. பூலான்தேவியின் கொள்ளை கூட்ட மூர்க்கத்தனத்தால் ஏற்பட்ட விளைவுகளை கூறுகிறது. பெரும்பான்மை சமூகத்தை, இரண்டு மாநிலங்களில் ஆட்டிப் படைத்ததை விளக்குகிறது. பூலான்தேவியின் முன்கோபம், முதிர்ச்சியற்ற குணத்தைக் காட்டுகிறது. அதீத கட்டுக்கதைகளால் புகழ் பெற்றதை சொல்கிறது. தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனதை விவரிக்கிறது. வீட்டு வாசலில் துப்பாக்கி முனைக்கு பலியானதையும் பகிர்கிறது. பூலான்தேவியின் வாழ்க்கை வரலாற்று நுால். – டி.எஸ்.ராயன்




