/ வரலாறு / பொற்கயல் - பாகம் – 1
பொற்கயல் - பாகம் – 1
பண்டைய தமிழர் வரலாற்றை அடியொற்றி, பாண்டிய நாட்டு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நாவல். முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியனின் போர், அக நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மார்க்கோ போலோவின் மதுரை குறிப்புகள் உதவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கதை மாந்தரை அறிமுகப்படுத்துவதில் உத்தி பளிச்சிடுகிறது. பாத்திரப் படைப்புகள் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரின் ஆரவாரங்களும், வைகை நதியின் சலசலப்பான ஓட்டமும், பறவை ஒலிகளும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள், மரக்கலங்கள் பற்றிய வருணனைகள் காட்சிகளாகி அக்காலத்துக்கே இட்டுச் செல்கின்றன. தற்கால மொழிநடையோடு புனையப்பட்டுள்ள புதினம். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு