/ புத்தக மதிப்புரை / பொருளியல் பேராசிரியர் ஆர்.வரதராஜனார் வாழ்வும் தொண்டும்
பொருளியல் பேராசிரியர் ஆர்.வரதராஜனார் வாழ்வும் தொண்டும்
பொருளாதார பேராசிரியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ள நுால். வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி நிகழ்வுகளாக தொகுத்து தரப்பட்டுள்ளன. காந்திஜி தமிழகத்தில் திருச்சி வந்தபோது, அவருக்கு தொண்டு செய்த விபரங்களை பெருமையாக குறிப்பிடுகிறது. திரைப்பட இயக்குநர் ராஜேந்தருக்கு பாடம் கற்பித்த நிகழ்வு பற்றிய தகவல்கள் சுவாரசியமாக தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியரின் அரிய செயல்கள், எளிய நினைவுகளுடன் ஓவியம் போல் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வி, பணி நிலவரம், குடும்ப வாழ்க்கை, பிரமுகர்களின் தொடர்புகள், பேராசிரியரின் சொற்பொழிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்று நுால். – ஒளி




