/ கட்டுரைகள் / பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் (பாகம் – 1)
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் (பாகம் – 1)
தாமிரபரணி குறித்த விபரங்களை விளக்கும் நுால். அனுபவ ரீதியாக சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.தென்றல் தோன்றும் இடம், 15 கிலோ மீட்டர் சூரிய ஒளியே படாமல் ஓடி வரும் தாமிரபரணி, காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், மாஞ்சோலை எஸ்டேட் குத்தகைக்கு சென்ற விதம் பற்றி விவரிக்கிறது. மழை வேண்டிய பூஜைகள் பற்றி விவரிக்கிறது. மஞ்சள் நிறத்தில் அற்புத அருவி, பன்னீர் மழை பொழியும் அதிசய மரம், சந்தன மழை, வசதி ஏதுமின்றி வசிக்கும் காணி இன மக்கள், அருவிகள் பற்றி எல்லாம் சொல்கிறது. பொதிகை மலை குறித்தும் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. தாமிரபரணி குறித்த அற்புத நுால்.-– இளங்கோவன்