/ வரலாறு / பொருநை (தாமிரபரணி) ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 1
பொருநை (தாமிரபரணி) ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 1
தாமிரபரணி குறித்த புராண வரலாறுகள், துணை நதியான சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு நதி குறித்து விளக்கும் நுால். நடைபயணத்தில் அனுபவ ரீதியாக எழுதப்பட்டுள்ளது.தென்றல் தோன்றும் இடம், சூரிய ஒளியே படாமல் ஓடி வரும் தாமிரபரணி, மாஞ்சோலை எஸ்டேட் குத்தகைக்கு சென்ற விதம், மணிமுத்தாறு தலையருவி பற்றிய குறிப்புகள் உள்ளன. குற்றால மலையில் மழை வேண்டி நடக்கும் அற்புத பூஜைகள், பன்னீர் மழை பொழியும் அதிசய மரம், சந்தன மழை, வசதி ஏதுமின்றி வசிக்கும் காணிகள், உயிர் பலியை ஏற்படுத்தும் அருவிகள் என சுவாரசியம் தரும் நுால்.– இளங்கோவன்