/ கேள்வி - பதில் / பொதுத் தமிழ் வினா – விடை

₹ 150

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். பொதுத் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உரிய வழிமுறைகளை உள்ளடக்கி உள்ளது. புத்தகத்தில் இலக்கண விரிவாக்க தகவல்கள், இலக்கிய குறிப்புகள், தமிழறிஞர்கள் செய்த தமிழ்த்தொண்டுகள் குறித்த விபரங்கள் வினா – வினா விடை வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன. அரசு தேர்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளை தேர்வு செய்து, எளிமையாக மனதில் பதியும் வகையில் பதில்கள் தரப்பட்டுள்ளன. பள்ளி – கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பயன் அளிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பணி தேர்வுக்கு தயாராவோருக்கு உதவும் நுால். – ஒளி


புதிய வீடியோ